காய்ச்சல் நின்ற பிறகும் இருமல் தொடர்கிறதா? நிமோனியா அபாயம் இருக்கலாம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

 
fever

தமிழகத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையால், காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. வைரஸ், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகளவில் உள்ளது.

இதற்கிடையே, வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, காய்ச்சல் குணமடைந்த பின்பும், இருமல் பாதிப்பு நீடித்து வருகிறது.

இதற்கு, மாத்திரை உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் அளித்தாலும், குணமடைய குறிப்பிட்ட காலத்தை எடுத்து கொள்வதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

சுவாசப் பாதையில், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர், மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை, இருமலால் பாதிக்கப்படுகின்றனர்.

வைரஸ் பாதித்தவர்களில், 25 சதவீதம் பேருக்கு, இவ்வகையான பாதிப்பு உள்ளது. இதை, வைரஸ் தொற்றுக்கு பின்பான இருமல் பாதிப்பு என்கிறோம்.

சுவாசப்பாதையில் வைரஸ் தொற்றால் ஏற்படும் அழற்சி, இருமலை துாண்டுகிறது. சைனஸ் பகுதிகளில் ஏற்படும் அழற்சி, நெஞ்செரிச்சல் போன்றவற்றாலும், தொடர் இருமல் பாதிப்பு ஏற்படுகிறது.

இவர்கள் வெந்நீர், தேநீர், சூப் பருகலாம். எலுமிச்சை சாறில் தேன் கலந்து சாப்பிடலாம். மேலும், துாசி, புகை இடங் களை தவிர்க்க வேண்டும். ஆழ்ந்த மூச்சு விடும் பயிற்சியை செய்யலாம்.

இவற்றை கடைப்பிடித்தும், இருமல் பாதிப்பு தொடர்ந்தால், நிமோனியா பாதிப்பாக இருக்கலாம். டாக்டரை சந்தித்து உரிய சிகிச்சை எடுப்பது அவசியம்.