விக்ரமன் வீட்டில் குவிந்த மருத்துவர்கள் - முதல்வருக்கு நன்றி

 
tn

திரைப்பட இயக்குனர் விக்ரமன் மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். குச்சிப்புடி கலைஞரான ஜெயப்பிரியா தமிழ்நாட்டில் 4,000 மேடைகளில் நடனமாடியுள்ளார்.  மருத்துவ குளறுபடியால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார்.  உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக பிரச்சனை ஏற்படுத்த தற்போது  சிறுநீரக பிரச்சனையால்  அவதிப்பட்டு வருகிறார்.  இதனால் தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளித்து உதவி செய்யுமாறு முதல்வர் ஸ்டாலினிடம் விக்ரமன் கோரிக்கை விடுத்திருந்தார்.

tn

அதன்படி பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்துள்ளார்.அமைச்சருடன் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் மற்றும் மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

tn

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் விக்ரமன் , ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் இடுப்பு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இடுப்பின் கீழ்பாகம் அனைத்தும் செயலிழந்து போனது.  இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது வேலையை கூட அவர் பார்த்துக் கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  தனது மனைவிக்கு மருத்துவ உதவி செய்யுமாறு முதலமைச்சரிடம் உதவி கேட்டிருந்தேன்.  அதன் அடிப்படையில் மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று எனது இல்லத்திற்கு வந்து எனது மனைவியை பரிசோதித்தார்கள். எனது  மனைவிக்கு உடல்நிலை குணமடைய சாத்தியம் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் தொடர்ந்து சிகிச்சை தருவதாக கூறி இருக்கிறார்கள்.  எனது வேண்டுகோள் ஏற்று உரிய நேரத்தில் டாக்டர் பட்டாளத்தையே வீட்டுக்கு அனுப்புன முதலமைச்சருக்கு நன்றி என்றார்.