நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம்..

 
doctors


கொல்கத்தாவில்  பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று  போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் உயிரிழந்து கிடந்தார். அரைநிர்வாண கோலத்தில் கடந்த 9ம் தேதி அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  போலீஸார் நடத்திய விசாரணையில் , அதற்கு முந்தைய நாள் (ஆக.8)இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  சஞ்சய் ராய் என்பவர் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
  நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டம்.. 

பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் வன்புணவு செய்யப்பட்டு படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் இன்று பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த மருத்துவ கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.  அதன்படி இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.