“பெற்றோரை பார்த்துக் கொள்” முதுநிலை நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மருத்துவர் மாயம்

 
DR

சென்னையில், முதுநிலை நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மருத்துவர் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு - தமிழக மாணவ - மாணவியர்களுக்கு... ஹீரோவா..? வில்லனா..? -  Mediyaan

திருச்சி  தில்லை நகரை சேர்ந்தவர் சூரஜ் கிருஷ்ணா(வயது 29). எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அறைஎடுத்து, கடந்த ஆறு மாதமாக தங்கி படித்து
PG நீட் (MD MS) entrance exam கடந்த 5.3.23 அன்று எழுதியுள்ளார். அதற்கான ரிசல்ட் கடந்த 14.3.23 தேதி 6.15 மணி அளவில் வந்துள்ளது.  குறைவான மதிப்பெண்கள் வந்ததை பார்த்து மனம் உடைந்த சூரஜ், திருச்சியில் உள்ள தம்பி நீரஜ் செல்போனுக்கு, அம்மா அப்பாவை பார்த்துக் கொள் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். 

இதையடுத்து நீரஜ், சென்னையில் உள்ள நண்பர் நடராஜன் என்பவருக்கு  தகவல் கொடுத்து, அண்ணன் அறைக்கு சென்று பார்க்குமாறு கூறியதில், அவரும் நேற்றிரவு 21.00 மணி அளவில் வந்து பார்த்தபோது வீட்டில் சூரஜ் இல்லை. இது தொடர்பாக திருச்சியில் உள்ள சூரஜின் பெற்றோருக்கு நடராஜன் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சூரஜின் குடும்பத்தினர் சென்னை வந்தனர். தொடர்ந்து அவர் மாயமானது குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் , சூரஜ் பயன்படுத்திய செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை குடும்பத்தினரிடம் கேட்டறிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.