நான் நன்றாக உள்ளேன் - மருத்துவர் பாலாஜியின் வீடியோ வெளியானது
கத்தியால் குத்தப்பட்ட சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியின் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
நான் நன்றாக உள்ளேன் - மருத்துவர் பாலாஜி #chennai #DoctorAttack #DoctorProtest #Balaji pic.twitter.com/Jb2nIa1oYi
— Top Tamil News (@toptamilnews) November 14, 2024
இந்த நிலையில், தான் நலமுடன் உள்ளதாக மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார். மருத்துவர் பாலாஜி சிகிச்சையில் இருக்கும் போது பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். தனக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாகவும் அவர் பல்வேறு தகவல்களை கூறினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர்மணிய உள்ளிட்டோர் உடனிருந்தனர்.