பெண் பிள்ளைகளை தொட்டுப் பேசுவதா..?மாணவியின் கால்களை வருடிய அமைச்சர் விஸ்வநாதன் செயல் பெரும் சர்ச்சை!
காங்., -- எம்.பி., ராகுல், முதல்வர் விஜய் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, மேலுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் த.வெ.க., சார்பில் சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் பங்கேற்ற, காங்., அமைச்சர் விஸ்வநாதன், அங்கு நடந்த நடன நிகழ்ச்சியில், விஜய் படத்தின், 'வாடி வாடி...' பாடலுக்கு த.வெ.க., பெண் நிர்வாகியுடன் நெருக்கமாக நடனமாடியது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், அவர் பேசுகையில், முதல்வர் விஜய் என்பதற்கு பதில், முதல்வர் ஸ்டாலின் என தவறாக குறிப்பிட்டதும் சர்ச்சையானது. இதே நிகழ்ச்சியில், மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற மாணவியரிடம், அமைச்சர் பேசும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில், அமர்ந்திருக்கும் ஒரு மாணவியின் இரண்டு கால்களையும் அமைச்சர் விஸ்வநாதன் பிடித்து வருடிக் கொடுக்கிறார். அந்த மாணவி முகத்துக்கு அருகே அமைச்சர் முகத்தை கொண்டு போய் பேசுகிறார். இதை அந்த மாணவி அருவருப்புடனும், கூச்சத்துடனும் பார்க்கிறார் .
இந்த வீடியோவும் தற்போது பரவி வருகிறது. இது அமைச்சருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளிடம் அமைச்சர் விஸ்வநாதன் அநாகரிமான செயல் #Madurai | #MinisterViswanathan | #Congress pic.twitter.com/eMhomlIwDL
— PttvOnlinenews (@PttvNewsX) June 23, 2026
மாணவிகளிடம் அமைச்சர் விஸ்வநாதன் அநாகரிமான செயல் #Madurai | #MinisterViswanathan | #Congress pic.twitter.com/eMhomlIwDL
— PttvOnlinenews (@PttvNewsX) June 23, 2026

