சென்னையைச் சுற்றிப்பார்க்க ஆசையா? சென்னை உலா பேருந்தின் நேர அட்டவணை வெளியானது..!
‘சென்னை உலா' பேருந்துகள் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, லஸ் கார்னர், சாந்தோம், கலங்கரை விளக்கம், விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம், தலைமைச் செயலகம், சென்னை ஐகோர்ட்டு, பல்லவன் இல்லம் வழியாக மீண்டும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.
இந்த பேருந்தில் ரூ.50 டிக்கெட் எடுத்துக் கொண்டு நாள் முழுவதும் மேலே உள்ள எந்த இடத்திலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஏறி மற்றொரு இடத்தில் இறங்குவதாக மட்டும் இருந்தால் அதற்காக டீலக்ஸ் பஸ் கட்டண அடிப்படையில் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். ½ மணி நேர இடைவெளியில் இந்த பேருந்துகள் இயக்கப்படும். நேற்று தொடங்கிய இந்த பேருந்துகளில் மக்கள் உற்சாகமாக பயணித்தனர். இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
சேவை நேரம்:-
• வார நாட்கள் (திங்கள் - வெள்ளி): மாலை 04:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
• வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்: காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
சென்னையின் பழமை & வரலாறு ஒரே பயணத்தில்!
— MTC Chennai (@MtcChennai) January 18, 2026
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் "சென்னை உலா" – Hop On Hop Off - Vintage bus சிறப்பு சுற்று வட்ட பேருந்து.
• வார நாட்கள் (திங்கள் - வெள்ளி):
மாலை 04:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
• வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்:
காலை 10:00… pic.twitter.com/qXmt1W7qHs


