20 கி.மீ சுற்றளவில் வசிப்பவரா நீங்கள்? சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கொண்டுவந்த அதிரடி மாற்றம்!
நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங் களிடம், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை செயல் பாட்டில் உள்ளது. தமிழகத்தில் உள்ள, 77 சுங்கச்சாவடிகளில் இந்த முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, சுங்கச்சாவ டியை சுற்றி, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்களின் சொந்த பயன்பாட்டுக்கான இலகு ரக வாகனங்களுக்கு, மாதாந் திர கட்டண அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும், 350 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த மாதாந்திர பாஸ்டேக் பெற, வாகன பதிவு சான்று, ஆதார் கார்டு ஆகியவற்றுடன் சுங்கச்சாவடிகளுக்கு வாகன உரிமையாளர் செல்ல வேண்டும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும், 'பாஸ்டேக் ரீசார்ஜ்' செய்யப்படும். சுங்கச்சாவடிகளுக்கு செல்லும் வாகன உரிமையாளர்கள், நீண்ட நேரம் காத்திருப்பு மற்றும் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, மாதாந்திர பாஸ்டேக் அட்டையை, 'ஆன்லைன்' வாயி லாக வழங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து உள்ளது. புதிய நடைமுறை அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி வாயிலாக, இனி மாதாந்திர பாஸ்டேக் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
டில்லியில், இரண்டாவது நகர்ப்புற விரிவாக்க சாலையில் உள்ள முண்ட்கா - பக்கர்வாலா சுங்கச்சாவடியில், இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஆன்லைன் மாதாந்திர பாஸ்டேக் மற்றும் மார்க் மித்ரா ஆன்லைன் உதவி மையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங் களிடம், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை செயல் பாட்டில் உள்ளது. தமிழகத்தில் உள்ள, 77 சுங்கச்சாவடிகளில் இந்த முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, சுங்கச்சாவ டியை சுற்றி, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்களின் சொந்த பயன்பாட்டுக்கான இலகு ரக வாகனங்களுக்கு, மாதாந் திர கட்டண அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக மாதந்தோறும், 350 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த மாதாந்திர பாஸ்டேக் பெற, வாகன பதிவு சான்று, ஆதார் கார்டு ஆகியவற்றுடன் சுங்கச்சாவடிகளுக்கு வாகன உரிமையாளர் செல்ல வேண்டும். அங்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும், 'பாஸ்டேக் ரீசார்ஜ்' செய்யப்படும். சுங்கச்சாவடிகளுக்கு செல்லும் வாகன உரிமையாளர்கள், நீண்ட நேரம் காத்திருப்பு மற்றும் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, மாதாந்திர பாஸ்டேக் அட்டையை, 'ஆன்லைன்' வாயி லாக வழங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து உள்ளது. புதிய நடைமுறை அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி வாயிலாக, இனி மாதாந்திர பாஸ்டேக் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.
டில்லியில், இரண்டாவது நகர்ப்புற விரிவாக்க சாலையில் உள்ள முண்ட்கா - பக்கர்வாலா சுங்கச்சாவடியில், இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஆன்லைன் மாதாந்திர பாஸ்டேக் மற்றும் மார்க் மித்ரா ஆன்லைன் உதவி மையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. title