பாக்கியராஜின் முதல் மனைவி யார் தெரியுமா?
கதை, திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர் பாக்யராஜ். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் ஆகிய மூன்று படங்களில் பணிபுரிந்தார். அவருக்கு உதவி இயக்குநராக வாய்ப்பைக் கொடுத்த பாரதிராஜா தான், புதிய வார்ப்புகள் படத்தில் பாக்யராசை ஹீரோவாக்கி அழகு பார்த்தார்.
சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தை இயக்கி இயக்குநராக மாறிய பாக்யராஜ், அதன் தூறல் நின்று போச்சு, சின்ன வீடு, எங்க சின்ன ராசா, அந்த 7 நாட்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, இது நம்ம ஆளு என அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து. தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி முத்திரைப்பதித்தார்.
பாக்கியராஜின் முதல் மனைவி யார் தெரியுமா?
பாக்யராஜின் முதல் மனைவியின் பெயர் பிரவீணா, அவர் தெலுங்கு பெண், ஆந்திராவில் இருந்து சென்னை வந்தார். அப்போது எம்ஜிஆர் சினிமாவை விட்டு, கொஞ்சம் விலகி அரசியலில் பிஸியாக இருந்தார். கடைசியா கையில் இருந்த சில படங்கள் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர், எம்ஜிஆரின் வசனகர்த்தா ரவீந்திரன் மூலம் எம்ஜிஆரை பிரவீணாவிற்கு அறிமுகம் செய்துவைத்தார். எம்ஜிஆரின் உதவியால், பிரவீணாவிற்கு தமிழில் சில வாய்ப்புகள் வந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அவரது மொழி தெலுங்கு என்பதால் தமிழ் தெரியவில்லை. அந்த நேரத்தில், பாக்கியராஜுக்கும் சரியான வாய்ப்பு இல்லை, பணம் கிடையாது, தங்குவதற்கு இடம் கிடைக்காமல் சுத்திக்கொண்டு இருந்தார். அதன் பிறகு தான் பாரதிராஜா கூட சேர்ந்து வேலைபார்க்க ஆரம்பித்தார்.
அப்போது தான், பிரவீணாவிற்கு தமிழ் கற்று தருவதற்காக பாக்யராஜ் வந்தார். பின்னாளில், அவங்களுக்குள்ள ஒரு புரிதல் வந்து, இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அப்போது, பாக்யராஜுக்கு பட வாய்ப்பு இல்லை, பணமும் இல்லாததால், பிரவீணா அவருக்கு நிறைய உதவிகள் செய்து, தங்குவதற்கு இடம், உணவு, உடை என அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார். இது அப்படியே பாக்கியராஜுக்கும் பிரவீணாவிற்கும் இடையே காதலாக உருவாகி, இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். இந்த நேரத்தில் தான் பாக்யராஜ், சுவர் இல்லா சித்திரங்கள் படத்தை இயக்குகிறார். பாக்யராஜ் கொஞ்சம் வளர்ந்து வந்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து எம்ஜிஆரிடம் இந்த விஷயத்தை சொல்ல, பின் எம்.ஜி.ஆர் தலைமையில் இவர்களின் திருமணம் நடக்கிறது.
நடிகை பிரவீணா, "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்து இருக்கிறார். பாமா ருக்மணி படத்தில் ராதிகாவும் பிரவீணாவும் நடித்திருந்தார்கள் அந்த படத்தில் பாக்யராஜுக்கு இரண்டு ஜோடி. அந்தப் படம் ஒரு காதல் திரைப்படம் நன்றாக தியேட்டரில் ஓடியது.
நீண்ட நாள் காதலர்களாக இருந்த பாக்யராஜ் மற்றும் பிரவீணா, 1981-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் பிரவீணா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார். சினிமாவிலும், குடும்ப வாழ்க்கையிலும் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருந்த இந்த தம்பதியரின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
திருமணமான இரண்டே ஆண்டுகளில், 1983-ஆம் ஆண்டு பிரவீணாவுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பெற்றாலும் உடல்நிலை மோசமடைந்ததால், வெறும் 25 வயதிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பாக்யராஜுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இளம் வயதிலேயே வாழ்க்கை துணையை இழந்த சோகம், அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாகவே கடைசி வரை இருந்தது.
பிரவீணாவின் மறைவுக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து நடிகை பூர்ணிமாவை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் சாந்தனு பாக்யராஜும், மருமகள் கீர்த்தனாவும் திரைப்படத் துறையில் தங்களுக்கென தனி இடத்தைப் பெற்றுள்ளனர்.

