அண்ணாமலை களமிறங்கும் தொகுதி எது தெரியுமா..?

 
1 1

2024ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

ஆனாலும், அவருக்குக் கிடைத்த சுமார் நான்கரை லட்சம் வாக்குகளே கோவை தொகுதியில் திமுக, அதிமுக தயவில்லாமல் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகள் ஆகும். ஏனென்றால், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது.

இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அப்பகுதியிலேயே களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் அல்லது வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறக்க வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.