நம் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி எது தெரியுமா..?

 
1

இந்தியாவில், ஸ்மர்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள், எந்தெந்த செயலிகளில் தங்களுடைய நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர் என்பதை கண்டுபிடிக்க, ‘பேங்க் ஆஃப் அமெரிக்காவின்’ நிதிச்சந்தை ஆராய்ச்சி பிரிவு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் இந்த செயல்களில் இந்தியர்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்கிற புள்ளி விவரத்தோடு இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. 

ஸ்மார்ட் போனை அதிகமாக உபயோகிக்கும் இந்தியர்கள், எந்தெந்த சமூக வலைதளங்கள ரொம்ப நேரம் உபயோக்கின்றனர் தெரியுமா? இன்ஸ்டாகிராம் செயலியை 49 மணினேரம், 2 நிமிடம் உபயோகிக்கின்றனர். யூடியூப் செயலியை 47 மணி நேரம் 23 நிமிடம் வரை பயன்படுத்துகிறார்களாம். இதற்கு அடுத்து, பேஸ்புக்கில் 24 மணி நேரம் 45 நிமிடம் நேரத்தை செலவிடுகின்றனராம். எக்ஸ் தளத்தில், 13 மணி நேரம், 30 நிமிடம் கழிக்கிறார்கள். 

நம் ஊர் பிள்ளைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்தியாவிலேயே அதிக விளையாடப்படும் ஆன்லைன் கேமாக ஃப்ரீ ஃபயர் இருக்கிறதாம். இந்திய இளைஞர்கள் பலர், இந்த விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த விளையாட்டில் மட்டும் மாதம் 41 மணி நேரம், 12 நிமிடங்களை இவர்கள் செலவிடுகின்றனர். இதே போல, கேரம், லூடோ கிங் போன்ற ஆன்லைன் கேமிங் செயலிகளிலும் சுமார் 13 மணி நேரத்தை இந்தியர்கள் செலவிடுகின்றனர். 

நம் செல்போனில், வாட்ஸ் அப் இன்றியமையாத ஒன்றாக ஆகி விட்டது. இந்த செயலிதான் தொலைதூரத்தில் கடல் கடந்து இருப்பவர்களையும் இணைக்கிறது. இதன் மூலம் சாட்டிங் மட்டுமன்றி வீடியோ மற்றும் ஆடியோ காலும் செய்யலாம். இந்த செயலியில் மட்டும் சுமார் 18 மணி நேரம், 49 நிமிடத்தை இந்தியர்கள் செலவிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

முன்னர் எல்லாம், ஓடிடி தளங்களில் யாரேனும் ஒருவர் சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருப்பார், அவரிடமிருந்து ID, Username வாங்கி நாம் படமோ தொடர்களோ பார்ப்போம். ஆனால், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஓடிடி தளங்கள் பெரிதாக வளர்ந்து விட்டன. நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ 5 உள்ளிட்ட பல்வேறு தளங்கள் வந்து விட்டன. இவற்றை சுற்றி பெரிய பிசினஸும் நடைப்பெற்று வருகிறது. இப்படி ஓடிடி தளங்களில், இந்தியர்கள் அதிகபட்சமாக சுமார் 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை செலவிடுகின்றனராம்.