அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் விஜய் எத்தனையாவது இடம் தெரியுமா?
Jul 31, 2026, 17:08 IST1785497883881
அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் விஜய் 3-வது இடத்தில் உள்ளார்.
தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்ற சொத்து விவரங்களின் அடிப்படையில், தேர்தல் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ADR) மற்றும் National Election Watch வெளியிட்டுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1,413.8 கோடி. இதேபோல் ரூ.931.83 கோடி சொத்துகளுடன்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரண்டாவது இடத்தில் உள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் ரூ.648.85 சொத்துகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். குறைந்த சொத்துகள் கொண்ட முதல்வராக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.55.24 லட்சமாகும்.

