தீபாவளி ரயில் முன்பதிவு தொடக்கம் எப்போ தெரியுமா..? இந்த தேதியை குறிச்சு வெச்சுக்கோங்க..!
2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.வெளியூரில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள். குறைவான கட்டணம், சரியான பயண நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை கருத்தில் கொண்டு பலரின் விருப்பமாக ரயில்கள் உள்ளது. இத்தகைய ரயில்களில் 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை டிக்கெட் முன்பதிவானது தொடங்கவுள்ளது.
தீபாவளி நவம்பர் 8ம் தேதி என்ற நிலையில் நவம்பர் 5ம் தேதி முதலே வெளியூரில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அப்படியாக நவம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை செல்லவுள்ளவர்கள் செப்டம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை செல்லவுள்ளவர்கள் செப்டம்பர் 7ம் தேதி திங்கட்கிழமை முன்பதிவு செய்ய முடியும். நவம்பர் 7ம் தேதி சனிக்கிழமை பயணம் மேற்கொள்ள விரும்பினால் செப்டம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று விடுமுறை வாங்கி ஊருக்கு செல்ல விரும்பினால் செப்டம்பர் 9ம் தேதி புதன்கிழமை டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
மறுமார்க்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து ஊரில் இருந்து வர நவம்பர் 9ம் தேதி திங்கட்கிழமை டிக்கெட் வேண்டுமென்றால் செப்டம்பர் 10ம் தேதியும், செவ்வாய்கிழமையான நவம்பர் 11ம் தேதி வேண்டும் என நினைத்தால் செப்டம்பர் 11ம் தேதி வெள்ளிக்கிழமையும் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு நாளும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் நிலையில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் மக்களுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

