தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் என்னவாகும் தெரியுமா..?
தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க திமுக, அதிமுக கூட்டணி சேர்ந்தால், தவெக MLA-க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு பல கட்சிகளை அழைத்து வருகிறார். மெஜாரிட்டியை காட்டாததால் முதலமைச்சர் பதவி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக - அதிமுக கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தவெகவினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக - திமுக இணைந்து வந்தாலும் ஆட்சி அமைக்கலாம் என தமிழக ஆளுநர் அர்லேகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தவெக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் என்ன ஆகும் தெரியுமா..?
தவெகவின் முடிவு இப்படி என்றால் சட்டமன்றம் சஸ்பெண்ட் செய்யப்படும்.. பின் பிரிவு 356படி கலைக்கபட்டு, தேர்தல் ஒரு வருடம் கழித்து நடத்தப்படும்.
இது குறித்து தவெக சொல்வது என்னவென்றால், அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்யப் போகிறார்கள் என்று வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

