நூலக வருகை பதிவேட்டில் "பெயருக்கு பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா..?

 
1

கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள சிறைத் துறைக்குச் சொந்தமான சுமார் 7 ஏக்கர் பரப்பில் பொதுப்பணித்துறை சார்பில் பெரியார் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2024 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்தன.

இதையடுத்து, இந்த நூலகத்திற்கான திறப்பு விழா நேற்று (அக்.16) பகல் 12 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 11.00 மணியளவில் தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் காந்திபுரம் பெரியார் அறிவுலகத்துக்கு சென்றார். 

பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்திருந்த அவர், மதியம், 12:00 மணிக்கு அறிவுலகம் வந்தார். போலீஸ் மரியாதையை ஏற்ற பின், பெரியார் சிலையை திறந்து வைத்தார். முதல் தளத்தில் கல்வெட்டை திறந்து வைத்தார். அறிவியல் சாதனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குச் சென்று, ஒவ்வொன்றைப் பற்றியும் கேட்டறிந்தார். அரசு பள்ளி மாணவியர், அறிவியல் சாதனங்களின் செயல்பாடுகளை விளக்கினர்.வணக்கம் சொன்ன ரோபோகுழந்தைகள் பிரிவுக்குச் சென்று, அவர்களுடன் அமர்ந்து, தனது பெயர் விஜய் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர்களது பெயர்களை கேட்டார். டாடா காட்டி விட்டு கிளம்பினார். 

மற்றொரு அறையில் ரோபோ வணக்கம் சொன்னதும், அவரும் திருப்பி வணக்கம் சொன்னார்.அறிவுலகத்தை சுற்றிப்பார்த்த முதல்வர், பதிவேட்டில், 16.10.2026, சி.ஜோசப் விஜய் என்று தன்னுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதியதோடு, அதிகம் அறிந்துகொள் அச்ச்ம் குறையும் என்ற பொருளில், 'நோ மோர்; பியர் லெஸ்' என, ஆங்கிலத்தில் எழுதினார்.