இன்று என்ன நாள் தெரியுமா ? இன்று சர்வதேச உணவு கட்டுப்பாடற்ற தினம் - "நோ டயட் டே"..!

 
1

ஒவ்வொரு ஆண்டும் மே 6-ம் தேதி சர்வதேச உணவு கட்டுப்பாடற்ற தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதீத டயட்டால் நொந்துபோன பெண் ஒருவரால் உருவாக்கப்பட்டதுதான் நோ டயட் டே.

மேரி இவான்ஸ் யங் என்பவரால்,1992-ல் சர்வதேச ”நோ டயட் தினம்” தொடங்கப்பட்டது. இந்த நாளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், உணவைக் கட்டுப்படுத்துவது மற்றும் உணவுப் பசியை அடக்குவது பற்றி சிந்திக்காமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.இது நடைமுறைக்கு வந்த அடுத்த ஆண்டே, அதாவது 1993-ம் ஆண்டு பல்வேறு நாடுகளில் உள்ள பெண்ணியவாதிகளால் சர்வதேச உணவுக் கட்டுப்பாடு தினம் கடைப்பிடிக்கபடுகிறது.

பள்ளிக் குழந்தைகள் கூட டயட்டில் இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் காலத்தின் கொடுமை. சரிவிகித உணவு முறைதான் டயட் என்பது மாறி, உணவைக் குறைப்பதும் சாப்பிடாமல் இருப்பதும்தான் டயட் என்று காலப்போக்கில் மாறிவிட்டது.

இன்றைய உலகில் தங்கள் உடல் எடை குறித்தும், தோற்றம் குறித்தும் தான் பெரும்பாலானோர் கவலைப்படுகிறார்கள். இதில் ஆண், பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லை.நாற்பதுகளை தொட்டவர்களுக்கு இளமையாகத் தோன்ற வேண்டும் என்கிற கவலை என்றால், இருபதுகளில் இருப்பவர்களுக்கோ உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பெருங் கவலையாக உள்ளது. அதன் எதிரொலியாக பிறந்தது தான் நோ டயட் தினம்.