இது தெரியுமா ? இனி இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் வாட்ஸ்அப்..! போட்டோ, வீடியோ கூட அனுப்பலாம்..!

 
1

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வாட்ஸ்அப் செயலி தற்போது இணையம் இல்லாமல் ஆவணங்களை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்பமுடியும். அந்தவகையில் இப்போது வாட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது.

அத்துடன் ஆவணங்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் என்றும் இந்த அம்சத்தை செயல்படுத்த வாட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் இந்த அம்சம் தற்போது beta பயனர்களால் சோதனை முறையில் சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

ப்ளூடூத் பயன்படும் முறையிலேயே இதுவும் இயங்கும். இதற்கு இரண்டு டிவைஸ்கள் இணைக்கப்பட வேண்டும். இதனையடுத்து தொடர்பு எண்கள், போட்டோக்கள், வீடியோக்கள் என முக்கியமான டாக்குமெண்ட்களை ஷேர் செய்யலாம். இதற்கு இன்டர்நெட் தேவைப்படாது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.