இது தெரியுமா..? தினமும் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால்...
தேனுடன் பூண்டு சாப்பிட்டால் செரிமான மண்டலத்தை சீராக்கி செரிமானத்தை அதிகரிக்கிறது. மிக வேகமாக உடல் எடை குறைவதற்கு உங்களுடைய செரிமான அமைப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும்..இப்பதிவில் தேனுடன் பூண்டு சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று பார்க்கலாம்
1.பொதுவாக ஒருவர் தேன் மற்றும் பூண்டு கலவையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது உடலில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மை குறைந்து ஆரோக்கியம் பிறக்கும் .
2.சிலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கும் ., மேலும் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் காலையில் தண்ணீருடன் பச்சை பூண்டை சாப்பிட அது குறையும்
3.இதற்குக் காரணம் வெள்ளைப்பூண்டில் இருக்கக்கூடிய பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் தாதுக்கள் ஆகும் . 4. நீங்கள் தேனுடன் பூண்டை சாப்பிடும் பொழுது உங்களுடைய உடல் எடையைக் குறைக்கும்
5.மிக முக்கியமாக தேனுடன் பூண்டு சாப்பிட்டால் இது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது.
7.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் மிக வேகமாக காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகளை குணமாக்குகிறது.
8.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
9.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேன் மற்றும் பூண்டு கலவையை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் பொழுது
10.தேனுடன் பூண்டு சாப்பிட்டால் உங்களுடைய உடலில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மையைப் போக்குகிறது.
தனித்தனியாக தோல் உரித்து எடுக்கப்பட்ட பூண்டு- 20
தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு)பூண்டை ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது)
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது.
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நண்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது.
இந்த தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம்.

