தவெக வேட்பாளர் ராஜ்மோகன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? 39 லட்சத்தில் வீடு, 100 சவரன் தங்க நகை, கார்....

 
1

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் எழும்பூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார் ராஜ்மோகன்.இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மூலம் சொத்து மதிப்பு தெரிய வந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் வருமான வரிக் கணக்கில் காட்டிய மொத்த வருமானம்

நிதியாண்டு வருமான விவரங்கள்
2020-21 7,35,450
2021-22 8,09,420
2022-23 11,38,610
2023-24 9,20,360
2024-25 23,70,280

ராஜ்மோகனின் கையிலுள்ள ரொக்கம் என்பது ஒரு லட்ச ரூபாய். அவரது மனைவி கையில் 10,000 ரூபாய் இருக்கிறது. இவர்கள் இருவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மொத்தமாக சேர்த்தாலே ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது.
 
  • ராஜ்மோகன் SBI வங்கி – ரூ.10,000
  • ராஜ்மோகன் HDFC வங்கி – ரூ.1,00,000
  • மனைவி HDFC வங்கி – ரூ.10,000

ராஜ்மோகன் தனக்கு மட்டும் 10 லட்ச ரூபாய்க்கு எல்.ஐ.சி பாலிசி எடுத்திருக்கிறார். மனைவிக்கு எடுக்கவில்லை. மேலும் யாருக்கும் எந்தவித கடனும் வழங்கவில்லை. நகைகள் விஷயத்தில் கொஞ்சம் கவனம் பெறுகிறார்.

ராஜ்மோகனிடம் நகைகள் மனைவியிடம் இருக்கும் நகைகள்
தங்கம் 400 கிராம் (50 சவரன்); மதிப்பு 54,00,000 தங்கம் 400 கிராம் (50 சவரன்); மதிப்பு 54,00,000
வெள்ளி 2 கிலோ; மதிப்பு 4,90,000 வெள்ளி 2 கிலோ; மதிப்பு 4,90,000


ராஜ்மோகனிடம் 7 லட்ச ரூபாய் மதிப்பில் FORD FIGO Aspire/ 2026 கார் ஒன்று இருக்கிறது. மொத்தமாக பார்த்தால் ராஜ்மோகனிடம் 1.05 கோடி ரூபாய் மதிப்பு பெறுகிறது. மனைவியிடம் 59 லட்சம் மதிப்பு பெறுகிறது. மேலும் வேளாண்மை அல்லாத பிற நிலமாக 1,200 சதுர அடி வைத்திருக்கிறார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு 7 லட்ச ரூபாய்.

மேலும் குடியிருப்பு கட்டடமாக 583 சதுர அடி மதிப்பில் வீடு உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 39 லட்ச ரூபாய் ஆகும். ராஜ்மோகன் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். HDFC வங்கியில் கிட்டதட்ட 27 லட்ச ரூபாய் கடன் பாக்கியுள்ளது. அருண் ஆனந்த், ஸ்டீபன் ராஜ், தினேஷ் குமார் என மூன்று பேருக்கு தலா ஒரு லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.