ஃபிக்சட் டெபாசிட் செய்பவர்கள் 444 நாட்கள் திட்டத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா ?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் & சிந்த் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற பல வங்கிகள் இந்த 444 நாள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தை அறிந்து உங்கள் பணத்திற்கு சிறந்த லாபம் தரும் வங்கியைத் தேர்வு செய்ய வேண்டும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது 'அமிர்த விருஷ்டி' சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ், பொது வாடிக்கையாளர்களுக்கு 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேபோல, பஞ்சாப் & சிந்த் வங்கி தனது 444 நாள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இந்தியன் வங்கியும் 444 நாள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
கனரா வங்கி தனது 444 நாள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேபோல, பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் தனது 444 நாள் சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 6.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த மூன்று வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குவதால், பஞ்சாப் & சிந்த் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளில் பொது வாடிக்கையாளர்கள் 444 நாட்களுக்கு ரூ. 8,55,000 முதலீடு செய்தால் தோராயமாக ரூ. 9,25,867.60 முதிர்வுத் தொகையாகப் பெறுவார்கள். இதில், வட்டியாகக் கிடைக்கும் தொகை ரூ. 70,867.60 ஆகும்.
இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும் ஒரே வட்டி விகிதத்தை வழங்குவதால் இந்த வங்கிகளில் பொது வாடிக்கையாளர்கள் ரூ. 8,55,000 முதலீடு செய்தால், தோராயமாக ரூ. 9,26,976.11 முதிர்வுத் தொகையாகப் பெறுவார்கள். இதில், வட்டியாகக் கிடைக்கும் தொகை ரூ. 71,976.11 ஆகும். கனரா வங்கியில் பொது வாடிக்கையாளர்கள் ரூ. 8,55,000 முதலீடு செய்தால், தோராயமாக ரூ. 9,24,760.15 முதிர்வுத் தொகையாகப் பெறுவார்கள். இதில், வட்டியாகக் கிடைக்கும் தொகை ரூ. 69,760.15 ஆகும்.


