பிக் பாஸ் தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? தலைசுற்ற வைக்கும் பின்னணி!
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ஒவ்வொரு சீசனுக்கும் தொகுப்பாளர்களாக பங்கேற்கும் பிரபலங்கள் பெறும் சம்பளம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான், ஒரு சீசனுக்கு ரூ.200 கோடி சம்பளம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்காலி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சௌரவ் கங்குலி, ரூ.125 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, ரூ.75 கோடி முதல் ரூ.80 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நாகார்ஜுனா, ரூ.35 கோடியும், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மோகன்லால், ரூ.30 கோடியும் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கிச்சா சுதீப், ரூ.20 கோடி சம்பளம் பெறுவதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

