காற்று மாசுபாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

 
1

அசாமில் உள்ள பைர்னிஹாட் நகரம், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு PM2.5 துகள்களின் அளவு அபாயகரமான அளவில் உள்ளது. தலைநகர் டெல்லி, உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக நீடிக்கிறது. டெல்லியின் ஆண்டு PM2.5 செறிவு 91.6 மைக்ரோகிராம்/கன மீட்டர் ஆகும். இது கடந்த ஆண்டை விட மிகக் குறைந்த அளவே.

உலகின் 20 மிகவும் மாசுபட்ட நகரங்களில் 13 இந்திய நகரங்கள் என்பது வேதனைக்குரிய உண்மை. முல்லன்பூர், ஃபரிதாபாத், டெல்லி போன்ற நகரங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன

இந்த மாசுபாட்டின் விளைவாக, இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைந்துள்ளது. ஒவ்வொரு சுவாசத்திலும் நச்சு கலந்து, உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சுகிறது. நுரையீரல் தொற்று, இதய நோய், புற்றுநோய் என மரணத்தின் பல்வேறு வடிவங்களை இந்த நச்சுக்காற்று வழங்குகிறது.

PM2.5 துகள்கள் நுரையீரல் தொற்று, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுடன் தொடர்புடையவை.லான்செட் பிளானட்டரி ஹெல்த் நடத்திய ஆய்வில், 2009 முதல் 2019 வரை இந்தியாவில் PM2.5 மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 1.5 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. முக்கியமாக தொழிற்சாலை மற்றும் வாகன வெளியேற்றங்களே இதற்கு காரணம்.

இந்தியாவின் மோசமான காற்று தரத்தை சமாளிக்க, கடுமையான உமிழ்வு சட்டங்கள், தூய்மையான எரிபொருள் பயன்பாடு மற்றும் மாசுபாடு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக அமல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.