மார்ச் மாதத்தில் மட்டும் தங்கம் விலை எவ்வளவு குறைந்தது தெரியுமா ?
மார்ச் மாத தொடக்கத்தில் கிராம் ரூ.16 ஆயிரத்திற்கு மேல் இருந்த தங்கம் விலை, தொடர்ந்து குறைந்துக் கொண்டே வந்து கிட்டத்தட்ட ரூ.14 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. எனினும், இடையிடையே தங்கம் விலை சற்று ஏற்றம் பெற்றது.
இந்த ஆண்டு இறுதிவரை தங்கத்தின் விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும், அடுத்த ஆண்டு தங்கத்தின் விலை இதுவரை காணாத அளவு உச்சத்தை எட்டும் என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பலர் தங்கத்தை வாங்கி சேமிக்க தொடங்கியுள்ளனர்.
மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்த உயர்ந்த தங்கம் மாத இறுதிக்குள் படிப்படியாக குறைந்தது. மார்ச் 1ஆம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,775 ஆக இருந்தது. ஆனால் மாத இறுதியாக மார்ச் 31ஆம் தேதி வரும்போது, 22 கேரட் தங்கம் ரூ. 13,670 ஆகவும் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,25,280க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாத இறுதியில் ரூ.15,920 வரை குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.மொத்தமாக பார்க்கும்போது, மார்ச் மாதத்தில் தங்கம் விலை சுமார் 13.34% குறைந்துள்ளது. இது ஒரு மாதத்திற்குள் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்படுகிறது.
தங்கம் ஏன் இவ்வளவு சரிந்தது?
இந்த சரிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, அமெரிக்க டாலர் வலுவடைந்தது. உலக அளவில் தங்கம் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுவதால், டாலர் பலமடையும்போது பிற நாட்டு மக்களுக்கு தங்கம் விலை அதிகமாகத் தெரிகிறது. இதனால் முதலீட்டு சந்தையில் தங்கத்தின் தேவை குறைகிறது.
இரண்டாவது, ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க தயங்கும். இதில் குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவை தான் உலகம் முழுவதும் ஃபாலோ செய்யும் காரணத்தால், அமெரிக்காவில் பணவீக்கம் 4 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கும் வேளையில் வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
பொதுவாக, வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது தங்கம் விலை உயர்வுக்கு சாதகமாக சூழ்நிலை உருவாகும். வங்கி வைப்பு அல்லது பத்திரங்களில் குறைவான வருமானம் கிடைக்கும்போதுதான் மக்கள் தங்கத்தை நோக்கி திரும்புகின்றனர்.
| Date | Pure Gold (24 k) | Standard Gold (22 K) |
|---|---|---|
| 01/March/2026 | 17209.00 | 15775.00 |
| 02/March/2026 | 17083.00 | 15660.00 |
| 03/March/2026 | 16871.00 | 15465.00 |
| 04/March/2026 | 16582.00 | 15200.00 |
| 05/March/2026 | 16494.00 | 15120.00 |
| 06/March/2026 | 16320.00 | 14960.00 |
| 07/March/2026 | 16418.00 | 15050.00 |
| 08/March/2026 | 16418.00 | 15050.00 |
| 09/March/2026 | 16309.00 | 14950.00 |
| 10/March/2026 | 16418.00 | 15050.00 |
| 11/March/2026 | 16494.00 | 15120.00 |
| 12/March/2026 | 16331.00 | 14970.00 |
| 13/March/2026 | 16254.00 | 14900.00 |
| 14/March/2026 | 16102.00 | 14760.00 |
| 15/March/2026 | 16102.00 | 14760.00 |
| 16/March/2026 | 16047.00 | 14710.00 |
| 17/March/2026 | 15982.00 | 14650.00 |
| 18/March/2026 | 15894.00 | 14570.00 |
| 19/March/2026 | 15163.00 | 13900.00 |
| 20/March/2026 | 15218.00 | 13950.00 |
| 21/March/2026 | 14858.00 | 13620.00 |
| 22/March/2026 | 14858.00 | 13620.00 |
| 23/March/2026 | 14553.00 | 13340.00 |
| 24/March/2026 | 14455.00 | 13250.00 |
| 25/March/2026 | 14836.00 | 13600.00 |
| 26/March/2026 | 14564.00 | 13350.00 |
| 27/March/2026 | 14651.00 | 13430.00 |
| 28/March/2026 | 14902.00 | 13660.00 |
| 29/March/2026 | 14902.00 | 13660.00 |
| 30/March/2026 | 15022.00 | 13770.00 |
| 31/March/2026 | 14913.00 | 13670.00 |

