உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா ? அசர வைக்கும் திட்டம்!
டைம் டெபாசிட் திட்டத்தில் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. டைம் டெபாசிட் திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. உங்களுக்கு விருப்பமான திட்டத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
1. 1 வருட டைம் டெபாசிட்: 6.9 %
2. 2 வருட டைம் டெபாசிட்: 7.0 %
3. 3 வருட டைம் டெபாசிட்: 7.1 %
4. 5 வருட டைம் டெபாசிட்: 7.5 %
7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.
உதாரணமாக, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சத்தை 7.5% வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த மதிப்பு சுமார் ரூ.7.21 லட்சமாக இருக்கும். நீங்கள் அந்தப் பணத்தை மீண்டும் அதே திட்டத்தில் முதலீடு செய்தால், மற்றொரு 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் மொத்த மதிப்பு ரூ.10.40 லட்சமாக இருக்கும். அதாவது, நீங்கள் தொடர்ந்து மீண்டும் முதலீடு செய்தால், வட்டி மூலம் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அதோடு நீங்கள் சேமிக்க விரும்பும் தொகையையும் சேர்த்து வழங்கவும்.


