இதை மட்டும் 30ம் தேதிக்குள் பண்ணுங்க..! ரூ.5,000 ஊக்கத்தொகை பெறலாம்..!
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், அரையாண்டு அடிப்படையில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில், அரையாண்டின் முதல், 30 நாட்களுக்குள் சொத்து வரியை செலுத்துவோருக்கு, 5 சதவீதம் ஊக்கத்தொகை, அதிகபட்சமாக, 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
அதன்படி, 2026 - 27ம் நிதியாண்டு துவங்கி இருப்பதால், வரும் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி, ஊக்கத்தொகையை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஒவ்வொரு நிதியாண்டிலும், முதல் அரையாண்டு ஏப்., 1 முதல் துவங்குகிறது. இரண்டாம் அரையாண்டு அக்., 1ம் தேதி துவங்குகிறது. இந்த அரையாண்டின் துவக்கத்தில் முதல், 30 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு, 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதை சொத்து உரிமையாளர்கள் பயன்படுத்தி, அதன் பின்னான, 1 சதவீத அபராத தொகையை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



