மார்ச் 31-க்குள் இதை பண்ணிடுங்க.! ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்.!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டவுள்ளது.
ஆண்டு சந்தாவும் விலை உயர உள்ளது. பழைய கட்டணம் ரூ.3,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3,075 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த ரூ.3,075 கட்டணத்தை செலுத்தினால் ஓராண்டு காலத்திற்குள் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளை கடக்கலாம். இது வணிக ரீதி அல்லாத சொந்த உபயோக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆண்டு சந்தா மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் வழக்கமான பயண கட்டணமும் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள 77 சுங்கசாவடிகளில் 60 முதல் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. மொத்த விற்பனை விலை குறியீட்டின் (WPI) அடிப்படையில் ஐந்து சதவீதம் முதல் ஏழு சதவீதம் வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வாகன வகையைப் பொறுத்து ஒருமுறை செல்லும் கட்டணம் ரூ.10 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்படும்.
செங்கல்பட்டு (பரனூர்), விக்கிரவாண்டி, ஆத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கணியூர், சமயபுரம் போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இது அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும் பண வீக்கத்திற்கு ஏற்ப சுங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்படுத்துவதற்கான நிதி தேவை, கட்டுமான விலைகளின் உயர்வு மற்றும் இதர செலவுகள் இந்த விலை உயர்வுக்கு காரணம். ஆண்டுதோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி மொத்த விற்பனை விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த உயர்வு கணக்கிடப்படுகிறது.
நீங்கள் ஏற்கனவே ஆண்டு சந்தா வைத்திருப்பவர் என்றால் மார்ச் 31க்குள் புதுப்பிப்பதன் மூலம் பழைய விலையிலேயே (ரூ.3,000) பலன்களைப் பெறலாம்.

