டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது!

 
Tasmac

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது.  மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 20 ஆயிரம் வரை ரூபாய் 2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்


கடந்த 2016 ஆம் ஆண்டில் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நீக்கத்திற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. ஆனால் 2018 முதல் 2019 போல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது.

Tasmac

இந்நிலையில் மது கடைகளில் எக்காரணம் கொண்டும் 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்கினால் விற்பனையாளர்களே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.