"உயிரிழந்த காங். தலைவர் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை"

 
"உயிரிழந்த காங். தலைவர் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை"

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

நெல்லை காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு  மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், தனது உயிருக்கு ஆபத்தான மிரட்டல்கள் வருவதாக, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 30ம் தேதி புகார் மனு அளித்திருந்த நிலையில் காணாமல் போனார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், புகார் மீது காவல்துறை அலட்சியமாக 
இருந்ததால் அவரது உடல் கடந்த 4 ஆம் தேதி பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 


ஆனால் அது தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுக்கிறார். அதனை உறுதி செய்ய ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.