டிச.17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு..

 
உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்


திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணியின் முதலாவது மாநில மாநாடு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட - மாநில - மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அறிமுகக்கூட்டம் நடத்தப்பட்டது.  தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு ,  ஆ.ராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 13   தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அப்போதே டிசம்பர் மாதம் 2வது மாநில மாநாடு நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்திருந்தார்.

டிச.17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு..

அத்துடன் 2வது மாநில மாநாட்டிற்காக இளைஞர் அணி துணை செயலாளர்கள் ஒன்றிணைந்து ரூ. 51 லட்சத்திற்கான காசோலையையும்  அமைச்சர் உதயநிதியிடம் அப்போதே வழங்கியிருந்தனர். இதனையடுத்து 2வது மாநில மாநாட்டிற்காக ஆயத்தமாகி வரும் நிலையில், தற்போது தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

 இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து,  வருகிற 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.