கலகலக்கும் திமுக ; காத்திருக்கும் பாஜக

 

கலகலக்கும் திமுக ; காத்திருக்கும் பாஜக

திமுகவின் உடன்பிறப்பான உட்கட்சி பூசல், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு இன்று வேட்புமனுக்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் திரைமறைவு வேலைகள் ’ஜெட் வேகம்’ எடுத்துள்ளன.

கலகலக்கும் திமுக ; காத்திருக்கும் பாஜக


திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் காலமானதை அடுத்து அந்த பொறுப்பில் சீனியர் என்கிற அடிப்படையில் துரைமுருகனை அமர்த்த ஆசைப்பட்டார் ஸ்டாலின். இதையொட்டி துரைமுருகன் தான் வகித்துவந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து கொரோனா பரவல், பொதுக்குழு தள்ளிவைப்பு என அடுத்தடுத்து காட்சிகள் அரங்கேற, இருப்பதையும் விட்டுவிட்டு பதைபதைக்க ஆரம்பித்தார் துரை.

கலகலக்கும் திமுக ; காத்திருக்கும் பாஜக


ஏப்ரல் தொடங்கி பல நாட்கள், ஸ்டாலினின் தொடர்பு எல்லைக்கு வெளியில், ஏலகிரி மலைப் பகுதியிலேயே இருந்தார் மனிதர்.
ஆரம்பத்தில் பொதுச் செயலாளர் பதவியை துரைமுருகனிடம் தருவதில் ஆர்வம் காட்டிய ஸ்டாலினிடம் இப்போது மாற்றுச் சிந்தனை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தலைவர் பதவி வகிக்கும் தான் 70-ஐ நெருங்கும் நிலையில் நடு வயதைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கினால் என்ன என்கிற எண்ணம் அவரிடம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் பெரும்பான்மை வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சீனியரான துரைமுருகனை புறக்கணிப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்களையும் அவர் அலசி வருவதாக சொல்லப்படுகிறது.

கலகலக்கும் திமுக ; காத்திருக்கும் பாஜக


ஒருவேளை துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆகும் பட்சத்தில் அவர் வகித்துவந்த பொருளாளர் பதவியைக் கைப்பற்ற திமுகவிற்குள் மிகப் பெரிய உள்நாட்டு யுத்தமே நடப்பதாக பேச்சு.
டி.ஆர் பாலு, கனிமொழி, அ.ராசா, எ.வ.வேலு என ஏகப்பட்ட பேர் அந்த பதவிக்கு மல்லுகட்டுவதில் ஸ்டாலின் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதாக கேள்வி. இதில் ஸ்டாலின் சாய்ஸ் வேலுவாகத்தான் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் போட்டியைக் கண்டு அதிர்ந்துபோன அவர் சம்பந்தபட்டவர்களை கூல் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

கலகலக்கும் திமுக ; காத்திருக்கும் பாஜக


ஏற்கனவே தன் வசமிருந்த முதன்மைச் செயலாளர் பொறுப்பை நேருவிடம் இழந்த டி.ஆர் பாலு, பொருளாளர் பதவியை தந்தேயாக வேண்டும் என அடம் பிடிக்கிறாராம். இதற்காக பலர் மூலம் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் அவர்.
இந்த பரமபத விளையாட்டில் வாய்ப்பு கிடைக்காதவர்களை ஸ்டாலின் தற்காலிகமாக சமாதானப்படுத்தலாமே தவிர, அதிருப்தி நெருப்பு நிரந்தரமாக எரிந்துகொண்டிருக்கும் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
இப்படி கலகலத்துப் போயிருக்கும் திமுகவின் அதிருப்தியாளர்களை குறிவைத்து காய்நகர்த்தி வருகிறது பாஜக.