அசத்தலான திமுக தேர்தல் அறிக்கை வெளியானது : காலை உணவு திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்..!
- அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
- 1 முதல் 5 வகுப்பு வரை கொடுக்கப்பட்டு இருந்த முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்.
- மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்
- இலவச மின்சாரம் பெரும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரம் பம்ப் செட்கள் வழங்கப்படும்.
- அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும்.
- முதமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு 5 லட்சமாகவும், காப்பீட்டு தொகை 10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
- புதுமைப்பெண் தமிழ் புதல்வன் உதவித்தொகையோ 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்படும்.
- நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய்.3500 ஆகவும் கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூபாய் 4500 ஆகா உயர்த்தி வழங்கப்படும்.
- பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படும்
- முதியோர் உதவித்தொகை 1200 ரூபாயில் இருந்து 2000 ஆக உயர்த்தப்படும்.
- மாற்றுத்திறனாளி உதவித்தொகை 1500 ரூபாயில் இருந்து 2500 ஆக உயர்த்தப்படும்.
-
மீன்பிடி தடைகால சிறப்பு நிவாரண தொகை 8000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாக ஆக உயர்த்தப்படும்.மீண்டபிடி குறைவு கால் சிறப்பு நிவாரண தொகை 6 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாக உயர்த்தப்படும்.
-
சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்
-
சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் ஆக இருக்கும் பெண்கள் தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை எதுவுமின்றி 5 லட்சம் வரை மானியத்துடன் வாங்கி கடனுதவி வழங்கப்படும்
-
பேரிடர் கால இழப்பீடுகள் ஹெக்டர் ஒன்றிற்கு இரவை பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு 25000 ரூபாய் வழங்கப்படும், நீண்டகால பயிர்களுக்கு 27000 ரூபாயாகவும், மானவாரி பயிர்களுக்கு 12000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
-
மாவட்டங்கள் முதன் வட்டங்கள் வரை மருத்துவமனையில் டயாலசிஸ் சிகிச்சைக்கு கருவிகள் 2 மடங்கு உயர்த்தப்படும்
-
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதிய திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
-
8வது ஊதியக்குழுவை ஒன்றிய அரசு செயல்படுத்தியதுடன் அதனை மாநில அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செயல்படுத்த குழு அமைக்கப்படும்.
-
அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 லட்சம் காலி பணியிடங்களை காலதாமதமின்றி நிரப்பப்படும்.
-
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை.
-
5 ஆண்டுகள் உயர்கல்வி படிக்கும் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்
-
வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன். இதனை பயன்படுத்தி வாஷிங்மிஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
-
கடலோரங்களில் மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குளம் அமைக்கப்படும்.
-
அனைத்து மாவட்டங்களிலும் உள் விளையாட்டரங்கம்
-
பிசி, எம்பிசி, டிஎம்சி பிரிவினர் தொழில் தொடங்க ரூ.30 லட்சம் வரை கடன்
-
பல்வேறு துறைகளில் பணியாற்றும் திருநர், திருநங்கைகளுக்கு விருது வழங்கப்படும்.
-
அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள்
-
பொள்ளாச்சியில் மொழி போராட்ட காட்சிக்கூடம்
-
திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மாநகராட்சிகளின் அருகாமையில் நவீன உலகத்தர வசதிகளுடன் புதிய நகரங்கள்
-
50 புதிய செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.
-
5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்.
-
கடலூர் தஞ்சாவூர் தூத்துக்குடி திருவெல்வேலி ராமநாதபுரம் சேலம் திருப்பூர் விழுப்புரம் திருவண்ணாமலை கோவை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் புற்றுநோய்காண நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
-
பத்திரிகையாளர்களின் குழந்தைகள் கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் அனைத்தும் 2 மடங்காக உயர்த்தப்படும்.
-
தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்கா அமைக்கப்படும்.
-
MSME நிருவாண பொருட்கள் உலக அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் வணிக தளம் உருவாக்கப்படும்
-
கிராமபுறங்களில் ஆதாரங்களை கொண்டு ஊரக பகுதிகளில் 5000 புத்தொழில்கள் தொடங்கப்படும்
அனைத்து அரசு கலை கல்லூரிகளிலும் WI-FI வசதி
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும்

