திமுகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு..!!
Feb 12, 2026, 15:25 IST1770890106038
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் இப்போதே சூடுபிடித்துவிட்டது.அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு வழிகளிலும் பிரச்சாரம் நடந்து வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு திமுக தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது.சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கான "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற திமுகவின் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டலப் பயிற்சி மாநாடு காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்ற நிலையில், அதில் தான் இந்தப் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது.
2021 தேர்தல் சமயத்தில் திமுக சார்பில் இதேபோல ஒரு பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது. "ஸ்டாலின் தான் வராரு" என்று தொடங்கும் அந்த பாடல் மிக பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

