விருதுநகரில் பிப்.7ல் திமுக இளைஞர் அணி சந்திப்பு
திமுக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு பிப்.7ஆம் தேதி நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 14.12.2025 அன்று திருவண்ணாமலை, கலைஞர் திடலில், 28 கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் முதல் பாகம் வரை, வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் என ஒரு இலட்சத்து 30 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து, “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், அகிலமே வியக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சியோடு “தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு” வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட - கழக இளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., ஆ.இராசா எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., மு.பெ.சாமிநாதன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா தலைவர் - தாட்கோ, ப.அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ் எம்.பி., க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் - விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வரவேற்பில் வருகிற 07.02.2026 சனிக்கிழமை, மாலை 4.00 மணி அளவில், விருதுநகர், ‘கலைஞர் திடலில்’"தென் மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு" நடைபெற உள்ளது. இதில், தென்மண்டலத்தைச் சேர்ந்த கழக மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து வரலாறு படைத்திட, அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இளைஞர் அணி நிர்வாகிகளை “தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பிற்கு” அழைத்து வரும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரலாறு படைக்கப் போகும் இந்த “தி.மு.க. இளைஞர் அணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில்” மாண்புமிகு அமைச்சர் பெருமக்களான கே.ஆர்.பெரியகருப்பன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், த.மனோதங்கராஜ், மாவட்டச்செயலாளர்கள்/பொறுப்பாளர்களான இரா.ஆவுடையப்பன், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோ.தளபதி எம்.எல்.ஏ., நா.இராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., மு.மணிமாறன், மேயர் ரெ.மகேஷ், ஈ.ராஜா எம்.எல்.ஏ., வே. ஜெயபாலன், ம.கிரகாம்பெல் மாநகரச் செயலாளர்களான எஸ்.ஆர்.ஆனந்தசேகரன், எஸ்.ஏ.உதயசூரியன், பரமணி ஆனந்த், ஏ.எல்.பி.தினேஷ், சு.சுப்பிரமணியன், எஸ்.ராஜப்பா தென்மண்டல இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களான ம.கணேசன் , தனுஷ் எம்.குமார் , இரா.கிருஷ்ணகுமார் , எ.எஸ்.ஹரிஹரசுதன், சி.எம்.மதியழகன் , நாகனி பா.செந்தில்குமார், பா.வில்சன் மணிதுரை, பை.மு.ராமஜெயம், கே.சம்பத்ராஜா,எம். எஸ்.செல்வம், அ.ஆஜிப்கான், வி.விமல், டி.ஆர்.கிருஷ்ணராஜா, டி.எம்.எஸ்.முகேஷ், வி.அகஸ்தீசன், டி.ஜெகநாதன், ஜெ.ஜான்ரபீந்தர், ஏ.ஆர்.செளந்தர்ராஜன், மு.இளங்கோ மாநகர அமைப்பாளர்களான கே.கே.கருப்பசாமி, கோட்டையப்பன், அ.அப்துல் ரஹ்மான், எஸ்.அருண் சுந்தர், சி.டி.சுரேஷ், த.முத்துசெல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


