திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு தொடங்கியது!

 
dmk

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு தொடங்கியது.  

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார். மாநில உரிமைகள் பறிப்பு, நீட் விலக்கு உள்ளிட்ட 22 தலைப்புகளில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றவுள்ளனர். மாநாட்டின் நிறைவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்ற உள்ளனர்.

திமுகவின் 2வது இளைஞணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் காலை முதலே மாநாட்டு திடலுக்கு வருகை தந்துள்ளனர். திருவள்ளூரில் இருந்து பெத்தநாயக்கன்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்ட நிலையில், அதில் ஏராளமான தொண்டர்கள் வந்துள்ளனர். சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.