நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றுங்கள்... சபாநாயகருக்கு திமுக கடிதம்

 
நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றுங்கள்.. சபாநாயகருக்கு திமுக கடிதம்

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதால் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்து தரக்கோரி மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உதவும் வகையில், அக்கட்சியுடன் புதிய கூட்டணியை அமைத்துள்ளது. இது திமுகவின் பல தலைவர்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மக்களவை சபாநாயகருக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அதில்,காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதால் நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றி அமைத்து தர வேண்டும். மக்களவையில் திமுக எம்பிகளுக்கு தனி இருக்கை வேண்டும். காங்கிரஸ் எம்பிக்களுடன் ஒன்றாக அமர மாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மாறிவரும் அரசியல் சூழலால் காங்கிரஸ் உடனான எங்களது கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் காங்கிரசாருடன் இணைந்து தற்போதைய இருக்கை அமைப்பை தொடர்வது பொருத்தமற்றது. எங்கள் உறுப்பினர்கள் செம்மையாக பணியாற்ற இருக்கைகளை தனியே ஒதுக்கி தர வேண்டும் என்றும் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.