அருள் விக்னேஷை கைது செய்யக்கோரி திமுக மகளிரணி போராட்டம்
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியருக்கு ஆபாசமான மற்றும் முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், பொது நிகழ்ச்சிகளின்போது தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆபாச குறுச்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் த.வெ.க. எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி திமுக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் உருவ பொம்மையை எரித்த போராட்டக்காரர்கள், அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.

