இறுதியானது தொகுதிப் பங்கீடு - 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது திமுக

 
arivalayam

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ள நிலையில், 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதியானது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வபெருந்தகை அவர்களும் இன்று (9-3-2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 (ஒன்பது) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ள நிலையில், 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. இந்தியா கூட்டணியில் தமிழகத்தில், திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 + புதுச்சேரி, விசிக, சிபிஐ, சிபிஎம் தலா 2, ஐ.யு.எம்.எல்., கொமதேக, மதிமுக தலா 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டுள்ளது.