“Methamphetamine Supply பண்ணது திமுகதான்”- அமைச்சர் நிர்மல்குமார்

 
“விஜய்க்கு மக்கள் அளிக்கும் செல்வாக்கை கண்டு திமுகவுக்கு பயம் வந்துவிட்டது”- நிர்மல்குமார்


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் இரண்டரை மாதத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒருசில விதிகளை சேர்க்க உள்ளோம். பொதுமக்களின் தகவல்கள் மின்வாரியத்திடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். E-Sim Card இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

சென்னையில் சுமார் 600 முதல் 1,000 மின் மாற்றிகளை புதிதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள், சற்று உயரமான இடங்களில் பொறுத்தப்படும். ஒப்பந்த அடிப்படையில் இருப்பவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரியவில்லை. ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் சம்பளம் தரவில்லை. அதனால்தான் புதிய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.  கிண்டியில் 400KV துணைமின் நிலையம் ஒரு வாரத்தில் செயல்பாட்டுக்கு வரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் புதிதாக 5,000 மின் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். புது வண்ணாரப்பேட்டையில் 3 நாட்களுக்கு மின்வெட்டு என்பது தவறான தகவல். வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார். பொதுமக்கள் மின்சாரப் புகார்களுக்கு 94987 94987 என்ற 24 மணி நேர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். திமுக ஆட்சியில அவர்கள்தான் Methamphetamine Supply பண்ணது; Synthetic Drugs பரவியது கடந்த 5 ஆண்டில் தான்” என்றார்.