“தியாகிகளைப் போற்றுவோம்” - உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய
— Udhay (@Udhaystalin) November 1, 2026
போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல்…
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், "தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பை உறுதி செய்ய போராடிய எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். எல்லைப்போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்ற 110 தியாகிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கி சிறப்பித்தது நம் தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு. நம் தமிழ் நிலத்தை பாதுகாத்த எல்லைப்போராட்ட தியாகிகளைப் போற்றுவோம். அவர்கள் வழியில் மாநிலத்தையும் - மாநில உரிமைகளையும் காத்து நிற்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

