“WikiLeaks மூலம் வெளியான தகவல்..”- உதயநிதி ஸ்டாலினின் பதிவு

 
சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறதா தவெக அரசு?- உதயநிதி ஸ்டாலின்

பொம்மை முதல்வர் இன்று தனது உரையில், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று அவதூறாகப் பேசியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “பொம்மை முதல்வர் இன்று தனது உரையில், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று அவதூறாகப் பேசியிருக்கிறார். ஆனால், எமர்ஜென்சி காலத்தில் இந்திய அரசுக்கு எதிராக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டங்கள் குறித்து அமெரிக்க தூதரகம் தனது அரசுக்கு அனுப்பிய தகவல்கள், பின்னர் WikiLeaks மூலம் வெளியாகியுள்ளன. வரலாறு தெரியாமல் பேசுவது வேறு… தெரிந்தும் வரலாற்றை மறைப்பது வேறு. வரலாறு தெரிந்து பேசுங்கள், மாண்புமிகு விஜய் அவர்களே” எனக் குறிப்பிட்டுள்ளார்.