‘ரீல்ஸ் அமைச்சர்’ பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது- உதயநிதி

 
தவெக அரசுக்கு விரைவில் முடிவுரை- உதயநிதி ஸ்டாலின்

அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Image

தவெக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசுப் பள்ளியில் ஆய்வு நடத்திய போது, மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி அதற்கு மாணவிகள் பதிலளிக்கத் திணறினார்கள். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள 
உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.