“கோரிக்கை விடுத்த 2 மணி நேரத்தில் பட்டா”- உதயநிதி பெருமிதம்

 
ச்

கிருஷ்ணகிரியில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்த உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 2 மணி நேரத்தில் வீட்டுமனை பட்டா வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

Image

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி தங்கை திவ்யா.  கிருஷ்ணகிரியில் இன்றைய தினம்  மாலை, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாம் பங்கேற்ற போது, கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், அவர் தடகள போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களைக் குவித்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். மாற்றுத்திறனாளியான அவருடைய தாயார் திருமதி.சங்கீதாவின் ஊக்குவிப்பில், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருவதாக கூறிய திவ்யா, அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வேண்டும் என்று கோரி இருந்தார். அவர் கோரிக்கை விடுத்த 2 மணி நேரத்தில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை, அவரது தாயார் சங்கீதாவிடம் வழங்கி வாழ்த்தினோம். குரலற்றவர்களின் குரலாக திகழும் நம் திராவிட மாடல் அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த தங்கை திவ்யா மற்றும் அவரது தாயார் சங்கீதாவின் அன்பில் நெகிழ்ந்தோம். அவர்களுக்கு என்றும் துணை நிற்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.