‘மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்; மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்’- உதயநிதி

 
m

மக்கள் காட்டிய எழுச்சியும், ஆதரவும், வரவேற்பும் ‘மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்’ எனத் தமிழ்நாடு முடிவெடுத்துவிட்டதை உணர்த்தியதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

b


இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “23 நாட்கள், 38 மாவட்டங்கள், 135 க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குப் பயணம் செய்து, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் தலைமையிலான நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டோம். மக்கள் காட்டிய எழுச்சியும், ஆதரவும், வரவேற்பும் ‘மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான்’ எனத் தமிழ்நாடு முடிவெடுத்துவிட்டதை உணர்த்தியது. அதைத் தங்களது வாக்குகளின் மூலம் உறுதிப்படுத்தும் நாள் தான் ஏப்ரல் 23. தாய் தமிழ்நாட்டைக் காக்கும் இந்த ஜனநாயகப் போரில், கொல்லைப்புறமாகத் தமிழ்நாட்டை ஆளத்துடிக்கும் பாசிச பா.ஜ.க – அடிமை அ.தி.மு.க கூட்டணியை வீழ்த்துவோம். உதயசூரியனுக்கும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சின்னங்களுக்கும் வாக்களிப்போம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.