டம்மி முதலமைச்சருக்கே எம்.எல்.ஏக்களை தெரியாது- உதயநிதி ஸ்டாலின்

 
ச்

யார் அமைச்சர்கள், யார் சட்டமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் தெரியவில்லை. டம்மி முதலமைச்சருக்கே எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் யார் எனத் தெரியாது என  எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திமுக வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தட்டுத்தடுமாறி இன்று ஆட்சிக்கு வந்துள்ள புதிய கோஷ்டியில், அனைத்துமே ஜோக்கர்களாக உள்ளனர். “லாட்டரி அமைச்சர், பிளாக் டிக்கெட் வித்தவர், திருட்டு விசிடி விற்றவர், உருட்டுக்கட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர், சங்கி அமைச்சர்” என அடைமொழியில் அமைச்சர்களை சொன்னால் தான் மக்களுக்கு புரிகிறது. யார் அமைச்சர்கள், யார் சட்டமன்ற உறுப்பினர்கள் என யாருக்கும் தெரியவில்லை. டம்மி முதலமைச்சருக்கே எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் யார் எனத் தெரியாது. சட்டமன்றத்தில் ஒரு துறைப்பற்றி கேள்வி கேட்டால், மற்றொரு அமைச்சர் சம்மந்தமில்லாமல் பேசுகின்றனர்."நாம் ஒரு கேள்வி கேட்டால், நம்மை அசரவைக்கும்படி ஒரு பதில் சொல்வார்கள்” என்ற நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.

மாற்றம், தூய்மையான அரசு அமைப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தவெக, இன்று திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களின் பெயர்களை மாற்றி, ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர். அரசு வழக்கறிஞர் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல். இதுகுறித்து ஆளும்கட்சி நிர்வாகியே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மாற்றம் எனக் கூறி கல்லா கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வர வேண்டும்” என்றார்.