"சோபா வந்தவுடன் சில பேர் திமுகவை விட்டுச் சென்று விட்டனர்" - உதயநிதி
Jul 5, 2026, 13:55 IST1783239946090
திருவேற்காட்டில் திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் அரசியல் பேரிடர் நிகழ்ந்திருக்கிறது. சோஃபா வந்தவுடன் சிலர் நம்மைவிட்டு சென்றுவிட்டனர். யார் என்ன சொன்னாலும் இஸ்லாமியர்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும். தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக உள்ளது. தவெக அரசு. தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பேரழிவில் இருந்து தமிழ்நாட்டை திமுக மீட்கும், மு.க.ஸ்டாலின் நிச்சயம் மீட்பார். இஸ்லாமியர்களுக்கும் கழகத்துக்கும் இடையிலான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது.யார் என்ன அவதூறு பரப்பினாலும் சிறுபான்மையினர்களுக்கு என்றைக்குமே காவல் அரணாக திமுக உள்ளது” என்றார்.

