"சங்கி கூட்டத்தை தமிழகத்தை விட்டு ஒட ஓட விரட்ட வேண்டும்”- உதயநிதி ஸ்டாலின்

 
ச்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் செஞ்சி மஸ்தான் ஆதரித்து செய்து நான்கு முறை சந்திப்பில் தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 


பிரச்சாரத்தின் போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் கடந்த 5 வருடத்தில் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதால் உரிமையோடு  வாக்கு கேட்டு உங்களிடம் வந்துள்ளோம். இத்தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான தேர்தல்.  இத்தேர்தலில் டெல்லி அணியை  விரட்ட வேண்டும். டெல்லிக்கு அடிமையான சங்கி கூட்டத்தை தமிழகத்தை விட்டு ஒட ஓட  விரட்ட வேண்டும்” என்றார்.


கடந்த 2017 -ம் ஆண்டு சசிகலா அம்மையார் காலை பிடித்து ஆட்சிக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி அவர் வந்த விதம் இப்படிதான் என போட்டோவை காண்பித்து வாக்கு சேகரித்தார். எனவே இத்தேர்தலில் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் முரட்டு அடிமை அணியை விரட்ட வேண்டும், சங்கி அணி தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என கூறி செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் மஸ்தானுக்கு வாக்கு சேகரித்தார்