"விண்ணப்பித்தவர்களுக்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை"- உதயநிதி ஸ்டாலின்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒரு கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பித்த மகளிர் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலினின் சாதனைகளை கூறினார் 200 அல்ல, 200 பிளஸ் தொகுதிகளில் வெற்றிதான். அதிமுகவை பாஜக கூறுபோட்டுவிட்டது. அதிமுக தொண்டர்கள் சசிகலா அணியா?, சசிகலா டிரைவர் அணியா? செங்கோட்டையன் அணியா? எந்த அணி என தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர். திமுக தொண்டர்கள் கொளை பற்றியும் திட்டங்கள் பற்றியும் பேசி கொள்வார்கள்” என்றார்.

