“வேலைக்கு செல்லும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டினர்”- உதயநிதி ஸ்டாலின்

 
ச் ச்

கோவையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 


கோவையில் 9.67 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா கோவை ஆர் எஸ் புரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். 29 கோடியே 99 லட்சத்தில் முடிவுற்ற 64 திட்டங்களை தொடங்கி வைத்த உதயநிதி, மேலும், 82 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் 132 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.


பின்னர் விழாவில் உதயநிதி ஸ்டாலின், “கோவைக்கு எப்போது வந்தாலும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது.  திராவிட மாடல் என்றாலே எல்லோருக்கும் எல்லாம், இதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் தேவையானவற்றை அறிந்து அரசு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான விடியல் பயணம் முதலமைச்சர் முதல் கையெழுத்திட்டார். 700 கோடி பயணங்களை கட்டணமில்லாமல் மகளிர்கள் சென்றுள்ளார்கள். உயர்கல்வி படிக்கும் மூன்று லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 3.50 லட்சம் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, 21 லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெற்று வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆகையினால் இதில் கூடுதலாக மகளிர்கள் பயன் பெறுவார்கள்.

மகளிர் சுய உதவி குழு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது் பணிக்கு சென்ற மகளிர் இன்று தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர்.  திராவிட மாடல் அரசின் முயற்சியினால், பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களில் 43 சதவீதம் பெண்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிக்கு வர உள்ளனர். இந்தியாவிலேயே முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.  இந்த அரசு என்றும் மக்களுக்கு பக்க பலமாக இருக்கும். இந்த அரசுக்கு மக்களும் பக்க பலமாக துணை நிற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.