மக்களால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்- உதயநிதி ஸ்டாலின்
May 4, 2026, 19:20 IST1777902609599
தமிழக மக்களின் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழை பெற அவர் இன்று லயோலா கல்லூரிக்கு வருகைதந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள், ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். அந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்” என்றார்.

