“மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும்”- உதயநிதி ஸ்டாலின்

 
உதயநிதி

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு் சிsuந்தாதிரிப்பேட்டை திருவல்லிக்கேணி ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் , தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் , தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அதனை பார்த்துக் கொண்டுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்று அவர் கூறினார். சமீபத்தில் ஆறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றதாகவும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மகளிரை சந்திக்கும் போது வரவேற்பு இருப்பதாகவும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.

தொடர்ந்து சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் ஒன்றிய அரசு இதில் தலையிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு அதனை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.